ஆர்தர் ரோடு சிறையில் சஞ்சய் ராவத் எம்.பி.யை சந்திக்க உத்தவ் தாக்கரேக்கு அனுமதி மறுப்பு


ஆர்தர் ரோடு சிறையில் சஞ்சய் ராவத் எம்.பி.யை சந்திக்க உத்தவ் தாக்கரேக்கு அனுமதி மறுப்பு
x

ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் ராவத் எம்.பி.யை சந்திக்க உத்தவ் தாக்கரேக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் ராவத் எம்.பி.யை சந்திக்க உத்தவ் தாக்கரேக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனுமதி மறுப்பு

மும்பையில் பத்ரா சால் என்ற குடிசை சீரமைப்பு திட்ட மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த மாதம் 2-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சஞ்சய் ராவத் எம்.பி.யை சிறையில் சந்திக்க சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

கோர்ட்டில் அனுமதி

இது குறித்து ஆர்தர் ரோடு சிறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து ஒருவர் எங்களுக்கு போன் செய்தார். அப்போது சிறையில் சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரே விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் இதுபோன்ற சந்திப்பு கோர்ட்டு அனுமதியுடன் தான் நடக்க வேண்டும். எனவே சிறை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. கோர்ட்டு அனுமதியை பெற்று வரும்படி தெரிவித்து விட்டோம்" என்றார்.

அதேவேளையில் உத்தவ் தாக்கரேயிடம் இருந்து அனுமதி கேட்டு எழுத்துப்பூர்வமாக கடிதம் எதுவும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.


Next Story