சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு


சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 12 Sep 2023 7:15 PM GMT (Updated: 12 Sep 2023 7:15 PM GMT)

சரத்பவாரை அவரது வீட்டுக்கு சென்று உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.

மும்பை,

சரத்பவாரை அவரது வீட்டுக்கு சென்று உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார்.

திடீர் சந்திப்பு

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் சமீபத்தில் உடைந்தது. அஜித்பவார் தலைமையிலான அணியினர் பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளனர். இதற்கு மத்தியில் நடந்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் சரத்பவார் கலந்து கொண்டார். இந்தியா கூட்டணி கூட்டத்தை உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, மாநில காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மகா விகாஸ் அகாடி கட்சிகள் இணைந்து வெற்றிகரமாக நடத்தின. இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று திடீரென சரத்பவாரை நேரில் சந்தித்தார். சரத்பவாரின் 'சில்வர் ஓக்' வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. உத்தவ் தாக்கரேயுடன் சஞ்சய் ராவத் எம்.பி.யும் சென்று இருந்தார். இதேபோல தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீலும் உடன் இருந்தார்.

பேசியது என்ன?

ஆனால் இந்த சந்திப்பு பின்னணியை தலைவர்கள் வெளியிடவில்லை. சிவசேனாவின் இருதரப்பு எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்க விசாரணையை எதிர்க்கொண்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமும் விசாரணை நடத்தி முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் நேற்று முன்தினம் கூறியிருந்தார். இதுதொடர்பாக சரத்பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story