மிரா ரோட்டில் 11-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி - தற்கொலையா? போலீஸ் விசாரணை

மிரா ரோட்டில் 11-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலி - தற்கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 5 Sept 2023 12:30 AM IST (Updated: 5 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மிரா ரோட்டில் 11-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலியானார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை,

மிரா ரோட்டில் 11-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பலியானார். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாடியில் இருந்து விழுந்து பெண் பலி

தானே மாவட்டம் மிரா ரோடு, பூனம் கார்டன் பகுதியில் உள்ள செரனிட்டி கட்டிடத்தில் வசித்து வந்தவர் நிர்மலா (வயது35). இவர் நேற்று முன்தினம் மாலை கட்டிடத்தின் 11-வது மாடியில் உள்ள வீட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பெண்ணை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெண் தற்கொலை செய்தாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 11-வது மாடியில் இருந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் மிரா ரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story