காந்திவிலியில் பெஸ்ட் பஸ் மோதி பெண் பலி


காந்திவிலியில் பெஸ்ட் பஸ் மோதி பெண் பலி
x

மும்பை காந்திவிலியில் பெஸ்ட் பஸ் மோதி பெண் ஒருவர் பலியானார்.

மும்பை,

மும்பை காந்திவிலி கிழக்கு பகுதியில் அனிதா நகர் நோக்கி 289 எண் கொண்ட பெஸ்ட் பஸ் ஒன்று கடந்த 9-ந்தேதி காலை 9.15 மணி அளவில் சென்றது. தாக்குர்ஹவுஸ் நோக்கி செல்ல பஸ்சை இடதுபுறமாக டிரைவர் திருப்பி உள்ளார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற லதா சதுர்வேதி (வயது50) என்ற பெண்ணின் மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story