தானே ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ; ஆசாமி கைது
தானே ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
தானே ரெயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
தானே ரெயில் நிலையத்தில் 24 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று ரெயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஒருவர் பெண்ணின் உடலை தொட்டு பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதனை அறிந்த மற்ற பயணிகள் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது
போலீசார் விசாரணையில், அவரது பெயர் முகமது ஹனீப்(வயது 45) என்பதும், வாஷியில் உள்ள வெங்காய கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. முகமது ஹனீப் மீது தானே ரெயில்வே போலீசார் பாலியல் தொல்லை உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.