சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி இறுதிப்போட்டிக்கு ஸ்ரீகாந்த் முன்னேற்றம்


சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி இறுதிப்போட்டிக்கு ஸ்ரீகாந்த் முன்னேற்றம்
x
தினத்தந்தி 15 April 2017 12:14 PM GMT (Updated: 15 April 2017 12:14 PM GMT)

சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் இந்தோனேசியாவின் அந்தோணி கின்டிங்கை இந்திய வீரர் ஸ்ரீகாந்த் எதிர்கொண்டார். அப்போது இந்தோனேசியாவின் அந்தோணி கின்டிங்கை 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வீழ்த்தினார். இதன் மூலம் இறுதிப்போட்டியில் சக இந்திய வீரரான சாய் ப்ரணீத்தை ஸ்ரீகாந்த் எதிர்கொள்கிறார்.

Next Story