ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா சாம்பியன்


ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா சாம்பியன்
x
தினத்தந்தி 30 April 2017 1:52 PM GMT (Updated: 30 April 2017 1:52 PM GMT)

ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஸ்னா சின்னப்பா தீபிகா பல்லிகல்லை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

சென்னை,

19–வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் 11–9, 7–11, 11–7, 11–9 என்ற செட் கணக்கில் அனி அவ்–ஐ (ஹாங்காங்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 49 நிமிடங்கள் நீடித்தது. மற்றொரு அரைஇறுதியில் இந்திய நட்சத்திரம் ஜோஸ்னா சின்னப்பா 11–6, 11–4, 11–8 என்ற நேர் செட்டில் டோங் டஸ் விங்கை (ஹாங்காங்) எளிதில் வீழ்த்தினார். இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தீபிகா பலிக்கல்–ஜோஸ்னா சின்னப்பா மோதினார்கள். இறுதிபோட்டியில் சகவீராங்கனை தீபிகா பல்லிகல்லை ஜோஸ்னா வீழ்த்தினார். 13-15,12-10,11-13,11-4,11-4 என்ற கணக்கில் ஜோஸ்னா வெற்றி பெற்றுள்ளார்.

Next Story