ஆசிய பள்ளிகளுக்கான செஸ் போட்டி: வெண்கலம் வென்ற இந்தியாவின் ஆதித்யா, சுஹானி


ஆசிய பள்ளிகளுக்கான செஸ் போட்டி:  வெண்கலம் வென்ற இந்தியாவின் ஆதித்யா, சுஹானி
x
தினத்தந்தி 30 July 2017 1:58 PM GMT (Updated: 30 July 2017 1:58 PM GMT)

சீனாவில் நடந்த ஆசிய பள்ளிகளுக்கான செஸ் போட்டியில் இந்தியாவின் ஆதித்யா மற்றும் சுஹானி வெண்கல பதக்கங்களை வென்றனர்.

மும்பை,

சீனாவின் பன்ஜின் நகரில் ஆசிய பள்ளிகளுக்கான செஸ் போட்டி நடந்தது. இதில் 10 நாடுகளை சேர்ந்த 26 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியை சேர்ந்த ஆதித்யா பட்டீல் என்ற மாணவர் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டார்.

7 வயது நிறைந்த ஆதித்யா 5ன் கீழ் 7 என்ற புள்ளி கணக்கில் 3வது இடம் பிடித்துள்ளார். அவர் சக இந்தியரான கியான் அகர்வாலை வீழ்த்தி வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்.

அங்கு நடந்த 9 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான போட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுஹானி லோகியா வெண்கல பதக்கத்தினை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆதித்யா மற்றும் சுஹானி ஆகிய இருவரும் பாலாஜி குட்டுலாவிடம் பயிற்சி பெற்றவர்களாவர்.


Next Story