தொண்டையில் உணவு சிக்கி பிரபல பாடி பில்டர் மரணம்


தொண்டையில் உணவு சிக்கி  பிரபல பாடி பில்டர் மரணம்
x
தினத்தந்தி 23 Aug 2017 11:22 AM GMT (Updated: 23 Aug 2017 11:22 AM GMT)

அமெரிக்காவின் பிரபல பாடி பில்டர் தனது 26 வயதில் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



சாம்பியன் பட்டம் வென்ற பிரபல அமெரிக்க பாடிபில்டர் டல்லாஸ் மெக்கார்வர், இறுதியாக தனது காதலியான டானா புரூக்கிடம் பேசியுள்ளார்.

நான் உணவு சமைக்க போகிறேன், ஐ லவ் யூ, குட்பை என்று கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.

அதன்பின்னர் சமைத்த உணவை சாப்பிட்ட போது, உணவு குழாயில் உணவு அடைத்து மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

26 வயதான டல்லாஸ் மெக்கார்வர் என்பவர் அவரது ரசிகர்களால் பிக் கண்ட்ரி என்று அழைக்கப்படுகிறார், இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story