உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து முன்னேற்றம்


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியாவின் பி.வி. சிந்து முன்னேற்றம்
x
தினத்தந்தி 27 Aug 2017 3:50 AM GMT (Updated: 27 Aug 2017 3:50 AM GMT)

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கிளாஸ்காவ்,

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் அரையிறுதி சுற்று போட்டி ஒன்றில் 2016ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் சீனாவின் சென் யூபெய் விளையாடினர்.

இந்த போட்டியில், 21-13, 21-10 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி சிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  இந்த போட்டி 48 நிமிடங்களில் முடிந்தது.

இதேபோன்று மற்றொரு அரையிறுதி சுற்று போட்டி ஒன்றில் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கல பதக்கம் பெற்றார்.

இதனை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதி சுற்றில் இந்தியாவின் சிந்து ஜப்பானின் நோஜோமி ஒகுஹராவுடன் விளையாடுவார்.

Next Story