டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் ஹாங்காங் நாட்டின் வோங் விங் கி வின்சென்ட்டை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்.
கோபன்ஹேகன்,
டென்மார்க் நாட்டில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா சார்பில் விளையாடிய எச்.எஸ். பிரணாய் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் தோல்வி அடைந்த நிலையில் ஒரே நம்பிக்கை நட்சத்திர வீரராக கிதம்பி ஸ்ரீகாந்த் விளங்கினார்.

அவர் உலக தர வரிசையில் முதல் இடம் வகிக்கும் விக்டர் ஆக்செல்சென்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் வின்சென்ட்டை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் தன் வசப்படுத்தினார். இதனால் இந்தியாவின் பதக்க நம்பிக்கை உயர்ந்தது.
இதனை அடுத்து 2வது செட்டை விளையாட தொடங்கிய ஸ்ரீகாந்திற்கு முதல் செட் போன்று ஆட்டம் கைகொடுக்கவில்லை. அவர் வின்சென்ட்டை 11-9 என்ற நிலையில் பின் தொடர்ந்து சென்றார். எனினும், முடிவில் 2வது செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதனால் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இறுதி போட்டியில் கொரியாவின் லீ ஹியூன் இல் உடன் விளையாடுகிறார்.
Related Tags :
Next Story