ஆசிய பெண்கள் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்


ஆசிய பெண்கள் குத்து சண்டை சாம்பியன்ஷிப்  போட்டி:  அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்
x

ஆசிய பெண்கள் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தினை உறுதி செய்துள்ளார் மேரி கோம்.

ஹோ சி மின்ஹ் சிட்டி,

வியட்நாமில் ஆசிய பெண்கள் குத்து சண்டைக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இந்தியாவை சேர்ந்த குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடை பிரிவில் கால் இறுதி போட்டியில் சீனதைபேயை சேர்ந்த மெங்-சீய்ஹ் பின் உடன் விளையாடினார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார் 34 வயது நிறைந்த கோம்.  இவர் அரையிறுதியில் ஜப்பானின் டிசுபாசா கொமுராவை சந்திக்கிறார்.

இந்த போட்டியில் இதற்கு முன் 4 முறை தங்கம், ஒரு வெள்ளி என 5  போட்டிகளில் மேரி கோம் பதக்கங்களை வென்றுள்ளார்.


Next Story