ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமிற்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமிற்கு பிரதமர் வாழ்த்து
x
தினத்தந்தி 8 Nov 2017 10:52 AM GMT (Updated: 8 Nov 2017 10:52 AM GMT)

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டைப் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம் பங்கேற்றார். சிறப்பாக விளையாடிய அவர் இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் வடகொரியாவின் கிம்- ஹியாங்கை எதிர்கொண்ட அவர் மேரி கோம்  சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மேரிகோமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, மேரி கோமின் வெற்றியை கண்டு நாடே  பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆசிய குத்துச் சண்டைப் போட்டியில் மேரி கோம் பெறும் ஐந்தாவது சாம்பியன் பட்டம் இதுவாகும். 

Next Story