சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் சாய்னா நேவால் தோல்வி


சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர்: 2-வது சுற்றில் சாய்னா நேவால் தோல்வி
x
தினத்தந்தி 16 Nov 2017 7:15 AM GMT (Updated: 16 Nov 2017 7:15 AM GMT)

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனையிடம் சாய்னா நேவால் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

பெய்ஜிங்,

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் பிரதான சுற்று புஜோவ் நகரில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் 2- சுற்று ஆட்டம்  இன்று நடைபெற்றது. இதில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால்,  தரவரிசையில் 4 ஆம் இடம் வகிக்கும் ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுச்சி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21-18, 21-11 என்ற செட் கணக்கில் அகனே வெற்றி பெற்றார். இதன் மூலம்  சாய்னா நேவால் போட்டித்தொடரில் இருந்து வெளியேறினார். நடப்பு ஆண்டில் மட்டும் யமாகுச்சியிடம் சாய்னா நேவால் நான்கு முறை தோல்வி அடைந்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் 2-வது  சுற்றில் இந்திய வீரர் பிரனாய், 53-வது இடத்தில் உள்ள  சேக் யியூ லீ  என்ற சீன நாட்டைச்சேர்ந்த வீரரை எதிர்கொண்டார். 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 21-19,21-17 என்ற செட் கணக்கில் பிரனாய் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.  இந்திய வீராங்கனை பிவி சிந்து மட்டுமே தற்போது, இந்த தொடரில் நீடித்து வருகிறார். 

Next Story