2017 உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு


2017 உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு
x
தினத்தந்தி 30 Nov 2017 11:14 AM IST (Updated: 30 Nov 2017 11:14 AM IST)
t-max-icont-min-icon

2017 உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு.உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும்.

வாஷிங்டன்

அமெரிக்காவின் அனாஹிமில் நடைபெறும் 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மிர்பாய் சானு நாட்டின் முதல் பளு தூக்கும் பதக்கம் வென்றுள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 194 கிலோ எடை தூக்கி சானு தங்க பதக்கத்தை வென்றார். சானு 85 கிலோ ஸ்னாட்ச், 109 கிலோ கிளீன் மற்றும் ஜெர்க் என மொத்தம் 194 கிலோ தூக்கினார். இது இந்திய பளூதூக்கும் வீரரால்  உலக அரங்கில் அடையப்பெற்ற சாதனையாகும்.

1995 ல் சீனாவில் கர்ணம்  மல்லேஸ்வரி தங்கம் வென்ற  பின்னர் இது உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும். 

இது குறித்து மீரா பாய் கூறியதாவது:-

இந்த வெற்றிக்காக என் பயிற்சியாளர் விஜய் ஷர்மாவுக்கு நான்  நிறைய கடன்பட்டிருக்கிறேன். நாங்கள் கடினமாகவும், நம்பிகையுடனும் உழைத்தோம். இதை  2020  டோக்கியோவில் இதே சாதனை  நிகழ்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மணிப்பூரில்  ஒரு எளிய  குடும்பத்தில் இருந்து வந்தவர் சானு. தற்போது இந்திய ரெயில்வேயில் பணியாற்றி வருகிறார்.

மொத்தம் 193 கிலோ தூக்கி தாய்லாந்தை சேர்ந்த துண்யா சுக்சரோன்  இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.  கொலம்பியாவைச் சேர்ந்த  அனா ஐரிஸ் செகுரா 182 கிலோ தூக்கி  வெண்கலம் வென்றார். இந்தியாவைச் சேர்ந்த சஞ்சிதா சானு  5-வது இடம் பிடித்தார்.
1 More update

Next Story