400 மீட்டர் தடகள போட்டியில் அமெரிக்க மாணவர் உலக சாதனை


400 மீட்டர் தடகள போட்டியில் அமெரிக்க மாணவர் உலக சாதனை
x
தினத்தந்தி 11 March 2018 2:00 AM GMT (Updated: 11 March 2018 2:00 AM GMT)

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்த 400 மீட்டர் தடகள போட்டி ஒன்றில் அமெரிக்க மாணவர் உலக சாதனை படைத்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலை கழகத்தில் படித்து வரும் மாணவர் மைக்கேல் நார்மன் (வயது 20).  தடகள வீரரான இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்த கல்லூரி அளவிலான 400 மீட்டர் தடகள போட்டி ஒன்றில் 44.52 வினாடிகளில் பந்தய தூரத்தினை கடந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டில் நடந்த கல்லூரி அளவிலான தடகள போட்டி ஒன்றில் கெர்ரன் கிளெமண்ட் செய்த முந்தைய சாதனையை விட 0.05 வினாடிகள் குறைவான நேரம் எடுத்து நார்மன் இந்த சாதனை படைத்திருக்கிறார்.

இதற்கு முன் கடந்த 2016ம் ஆண்டு நடந்த 200 மீட்டர் தொலைவு கொண்ட அமெரிக்க ஒலிம்பிக் டிரையல்ஸ் போட்டியில் 5வது நபராக வந்துள்ளார்.  இதே ஆண்டில் நடந்த 200 மீட்டருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியை அவர் வென்றுள்ளார்.  இந்த நிலையில் அவர் பங்கேற்ற 3வது போட்டியில் உலக சாதனையை படைத்து உள்ளார்.


Next Story