காமன்வெல்த் போட்டியில் தங்கம்; தமிழக வீரருக்கு குவியும் பாராட்டுகள் தமிழக அரசு ரூ. 50 லட்சம் பரிசு


காமன்வெல்த் போட்டியில் தங்கம்; தமிழக வீரருக்கு குவியும் பாராட்டுகள் தமிழக அரசு ரூ. 50 லட்சம் பரிசு
x
தினத்தந்தி 7 April 2018 8:46 AM GMT (Updated: 7 April 2018 9:07 AM GMT)

காமன்வெல்த் போட்டியில் தங்கம் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார். #CWG2018 #EdappadiPalaniswami #SathishSivalingam

சென்னை

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில்,  ஆடவருக்கான (77 கிலோ எடைப்பிரிவு) பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இந்தியாவின் தங்கப்பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். “காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் மூன்றாம் நாளில் பளுதூக்கும் வீரர்கள் நம்மை பெருமைப்படுத்தி உள்ளனர். ஆடவர் 77 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்கள்’ என ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறியுள்ளார்.

 சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவருக்கு  ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என  முதலமைச்சர் பழனிசாமி  அறிவித்து உள்ளார்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள வாழ்த்துச்செய்தியில் ,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் - பளுதூக்குதலில் 77 கிலோ எடைப்பிரிவில் நமது வேலூரைச் சேர்ந்த சதிஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று தமிழகத்திற்கு  பெருமை சேர்த்துள்ளார். சதிஷ்குமார் மென்மேலும் சாதனைகள் புரிய எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறி உள்ளார்.

தி.மு.க செயல் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை தேடித்தந்துள்ள வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு வாழ்த்துகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற அவரது கனவு மெய்ப்பட அன்பான நல்வாழ்த்துகள்  என கூறி உள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்கும், இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளா சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு  அமித் ஷா வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Next Story