காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதல்; இந்தியாவின் ஜிது ராய் தங்க பதக்கம் வென்றார்


காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதல்; இந்தியாவின் ஜிது ராய் தங்க பதக்கம் வென்றார்
x
தினத்தந்தி 9 April 2018 4:17 AM GMT (Updated: 9 April 2018 4:17 AM GMT)

காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஜிது ராய் தங்க பதக்கம் வென்றுள்ளார். #CWG2018

கோல்டு கோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.  இதில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஜிது ராய் தங்க பதக்கம் வென்றார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ள வென்றவரான ராய் 235.1 புள்ளிகளை பெற்று இறுதியில் தங்க பதக்கத்தினை வென்றார்.  அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் மிதர்வால் 214.3 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கெர்ரி பெல் 233.5 புள்ளிகளை பெற்று வெள்ளி பதக்கத்தினை வென்றார்.

கடந்த 2017ம் ஆண்டில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஜிது ராய் 4 தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தினையும், காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார்.

Next Story