காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்


காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்
x
தினத்தந்தி 9 April 2018 5:09 AM GMT (Updated: 9 April 2018 5:09 AM GMT)

காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. #CWG2018

கோல்டு கோஸ்ட்,

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.  இதில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் 17 வயது நிறைந்த இளம் வீராங்கனை மெகுலி கோஷ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சண்டேலா வெண்கலம் வென்றுள்ளார்.

சிங்கப்பூரின் மார்டினா லிண்ட்சே வெலோசோ தங்க பதக்கத்தினை வென்றுள்ளார்.

கோஷ் மற்றும் லிண்ட்சே இருவரும் 247.2 புள்ளிகள் பெற்ற நிலையில், ஷூட் ஆப்பில் கோஷ் 9.9 புள்ளிகளும், லிண்ட்சே 10.3 புள்ளிகளும் பெற்றனர்.  இதனால் லிண்ட்சே தங்க பதக்கத்தினை தட்டி சென்றார்.

சண்டேலா மொத்தம் 225.3 புள்ளிகள் பெற்று 3வது இடத்தினை பிடித்துள்ளார்.  அவர் கடந்த 4 வருடங்களுக்கு முன் காமன்வெல்த் போட்டியின் தகுதி சுற்றில் படைத்த தனது சொந்த சாதனையை 423.2 புள்ளிகளுடன் இன்று முறியடித்து உள்ளார்.

Next Story