காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி; மணீஷ் கவுசிக் வெள்ளி வென்றார்


காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி; மணீஷ் கவுசிக் வெள்ளி வென்றார்
x
தினத்தந்தி 14 April 2018 10:46 AM IST (Updated: 14 April 2018 10:46 AM IST)
t-max-icont-min-icon

காமன்வெல்த் குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்தியாவின் மணீஷ் கவுசிக் வெள்ளி பதக்கம் வென்றார். #CWG2018 #ManishKaushik

கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணீஷ் கவுசிக் வெள்ளி பதக்கம் வென்றார்.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் 10-வது நாளான இன்றும் இந்திய அணியினர் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் குத்துச்சண்டை பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மணீஷ் கவுசிக் ஆஸ்திரேலியாவின் ஹாரி கார்சைட் உடன் மோதினார். இன்று பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மணீஷ் கவுசிக் 3-2 என்ற செட் கணக்கில் ஹாரி கார்சைட்டிடம் தோல்வி அடைந்தார். நூலிழையில் தங்க பதக்கத்தை தவற விட்டார். இதன் மூலம் வெள்ளி பதக்கத்தை அவர் கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்தியா 20 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் உள்பட 47 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

1 More update

Next Story