காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்

காமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார். #CWG2018
கோல்டு கோஸ்ட்,
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிருக்கான பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி. சிந்து மோதினர். இதில் 21-18, 23-21 என்ற நேர்செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி நேவால் வெற்றி பெற்றார்.
இந்த போட்டியில் தோல்வியடைந்த பி.வி. சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 26 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 62 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
Related Tags :
Next Story