ஆசிய விளையாட்டு போட்டி; துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
45 நாடுகள் பங்கேற்கும் 18வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நேற்று கோலாகலமுடன் தொடங்கியது. செப்டம்பர் 2ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதனை தொடர்ந்து இன்று போட்டிகள் தொடங்கின. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சார்பில் அபூர்வி சண்டேலா மற்றும் ரவி குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் மொத்தம் 429.9 புள்ளிகள் பெற்ற அவர்களுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளிலேயே இந்தியாவின் பதக்க வேட்டை தொடங்கியுள்ளது.
முதல் இடம் சீன தைபே இணைக்கும் (494.1 புள்ளிகள்), 2வது இடம் சீன இணைக்கும் (492.5 புள்ளிகள்) கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story