ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு 4-வது தங்கம்


ஆசிய விளையாட்டு போட்டிகள்:  இந்தியாவுக்கு 4-வது தங்கம்
x
தினத்தந்தி 22 Aug 2018 9:05 AM GMT (Updated: 22 Aug 2018 9:05 AM GMT)

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018

பாலெம்பேங், 

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று இந்தியா ஒரே நாளில் 5 பதக்கங்களை அள்ளியது. 

இந்த நிலையில், இந்தியாவின் பதக்க வேட்டை இன்றும் நீடிக்கிறது, மகளிர் 25 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் ராஹி சர்ன்பட் தங்கம் பதக்கத்தை தட்டிச்சென்றார். ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா வெல்லும்  5-வது தங்கம் இதுவாகும். 

இந்தியா தற்போது வரை 4 தங்கம், 3 வெள்ளி, 4  வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 6-வது இடத்தில் உள்ளது. 32 தங்கம், 21 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 

Next Story