ஆசிய விளையாட்டு போட்டி: தனிநபர் குதிரையேற்றத்தில் பதக்கம் வென்று இந்தியா சாதனை


ஆசிய விளையாட்டு போட்டி: தனிநபர் குதிரையேற்றத்தில் பதக்கம் வென்று இந்தியா சாதனை
x
தினத்தந்தி 26 Aug 2018 12:20 PM GMT (Updated: 26 Aug 2018 12:20 PM GMT)

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் குதிரையேற்றத்தில் இந்தியா பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. #AsianGames2018

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தனிநபர் குதிரையேற்றத்தில் இந்தியா சார்பில் பவுத் மிர்ஸா கலந்துகொண்டார். இப்போட்டியில் 26.40 புள்ளிகள் பெற்ற மிர்ஸா 2-ம் இடம் பிடித்தார்.

ஜப்பானின் யோசியாக்கி 22.70 புள்ளிகள் பெற்று தங்கத்தை வென்றார். சீனாவின் ஹுவா தியான் அலெக்ஸ் 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார்.

தனிநபர் குதிரையேற்றத்தில் 1982-ம் ஆண்டுக்குப் பின் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். இதேபோல் குழு பிரிவிலும்  மிர்ஸா, ராகேஷ் குமார், ஆஷிஷ் மாலிக் மற்றும் ஜித்தேந்தர் சிங் அடங்கிய குழு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் குதிரையேற்றப் பிரிவில் இந்தியாவுக்கு 2 வெள்ளி பதக்கங்கள் கிடைத்தது.

இந்த பதக்கங்கள் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் 7 தங்கம், 7 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. 73 தங்கம் உள்பட 163 பதக்கங்களுடன் தொடர்ந்து சீனா முதல் இடத்தில் உள்ளது.

Next Story