சீன ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி. சிந்து


சீன ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி. சிந்து
x
தினத்தந்தி 6 Nov 2018 6:23 PM GMT (Updated: 2018-11-07T00:28:32+05:30)

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில், 2-வது சுற்றுக்கு பி.வி. சிந்து முன்னேறினார்.

பீஜிங்,

சீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ரஷிய வீராங்கனை எவ்ஜெனியா கொசெட்ஸ்கயாவை எதிர்க்கொண்டார். முதல் சுற்றிலேயே அபாரமாக விளையாடிய பி.வி.சிந்து 21-13 என்ற புள்ளிக்கணக்கிலும், 2-வது சுற்றில் 21-19 என்ற புள்ளிக்கணக்கிலும் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.


Next Story