உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி


உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கம் வென்றார் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 27 April 2019 5:12 PM GMT (Updated: 2019-04-27T22:42:19+05:30)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

பீஜிங், 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இறுதி சுற்றில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா 242.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 

ரஷிய வீரர் அர்டெம் செர்னோசோவ் (240.4 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும், தென்கொரியாவின் செங்வு ஹான் (220 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். உலக போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்ற அபிஷேக் வர்மா 2020–ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். 

ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியா இதுவரை 5 இடங்களை உறுதி செய்து இருக்கிறது. 

Next Story