பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி; இந்திய வீரர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

இந்தியாவின் சிராக் மற்றும் சாத்விக் சாய்ராஜ் இணை பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிக்கான இரட்டையர் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
பாரீஸ்,
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி ஆகியோர் நேற்றிரவு நடந்த அரையிறுதி போட்டியில் விளையாடினர்.
அவர்கள் ஜப்பான் நாட்டின் ஹிரோயுகி என்டோ மற்றும் யூடா வாடானபே இணையை 21-11, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த போட்டி 49 நிமிடங்கள் நீடித்தது.
இந்திய இணை முதல் செட்டை எளிதில் தன்வசப்படுத்தியது. ஆனால், இரண்டாவது செட்டுக்கான போட்டியில் ஜப்பான் இணை சற்று கடுமையாக போராடினர். எனினும், இந்திய இணை வெற்றியை கைப்பற்றி பட்டம் வெல்வதற்கான இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Related Tags :
Next Story