வில்வித்தை பயிற்சியின் போது விபரீதம்... சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...!


வில்வித்தை பயிற்சியின் போது விபரீதம்... சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...!
x
தினத்தந்தி 11 Jan 2020 8:15 AM GMT (Updated: 11 Jan 2020 8:15 AM GMT)

அசாம் மாநிலத்தில் வில்வித்தை பயிற்சியின் போது 12 வயது சிறுமியின் மீது அம்பு பாய்ந்தது.

கவுகாத்தி

அசாமின் சபுயாவில் அந்த மாநிலத்திற்கான விளையாட்டு அமைப்பு  உள்ளது. இங்கு வில்வித்தை பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று  12 வயதிற்கான சிறுவர் மற்றும் சிறுமிகள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு தவறுதலாக அங்கிருந்து சிவாங்கினி கோகின் என்ற 12 வயது சிறுமியின்  வலதுகை தோள்பட்டையில் பாய்ந்தது.

இதனால் வலியால் துடித்த அந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் ஹெலிகாப்டர் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்த அம்பு எலும்பை துளைத்துள்ளது. தற்போது அவருக்கு உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story