கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து?


கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து?
x
தினத்தந்தி 26 Feb 2020 1:40 AM GMT (Updated: 26 Feb 2020 1:58 AM GMT)

கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24  ஆம் தேதி முதல்  மற்றும் ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

அதேவேளையில், சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.  ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானையும் கொரோனா வைரஸ் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனால், வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்று கேள்விகள் எழுந்தன. 

இந்த நிலையில், மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிடில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்றவோ, ஒத்திவைக்கவோ திட்டமில்லை எனவும்  ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Next Story