உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஷைலி சிங்

உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின், நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
நைரோபி,
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்று வரும் உலக இளையோர் U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியின், நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
முன்னதாக நேற்று முன் தினம் நடந்த தடகள போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் 6.40 மீட்டர் தாண்டி சாதனை படைத்தார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பிறந்த ஷைலி சிங் முதலில் 6.34 மீட்டரையும், 2வதாக 5.98 மீட்டரையும் தாண்டி இன்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 17 வயதான ஷைலி சிங், இந்தியரின் தனிப்பட்ட சிறந்த முயற்சியாக 6.59 மீ நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இவருடன் போட்டியில் பங்கேற்ற ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன் மஜா அஸ்காக் 6.60 மீட்டர் நீளம் தாண்டி தங்கபதக்கத்தை தட்டி சென்றார். இந்த இருவருக்கு இடையிலான இடைவெளி வெறும் 1 செ.மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story