பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்றார்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இறுதிபோட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் பிரமோத் வீழ்த்தினார். ஒடிசாவை சேர்ந்த 33 வயதாகும் பிரமோத் பகத் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தந்துள்ளார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள பதக்கங்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. பாரா ஒலிம்பிக்கில் 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
Related Tags :
Next Story