ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.
சார்புருக்கான்,
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் உள்ள சார்புருக்கான் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 21-18, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் 3 முறை ஜூனியர் உலக சாம்பியனான குன்லாவுத் விதித்சர்னை (தாய்லாந்து) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். உலக தரவரிசையில் 21ம் இடத்தில் இருக்கும் லக்சயா சென், அரையிறுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த லோ கீன் யீவை எதிர்கொள்கிறார்.
இதேபோல் மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்தும் அரைஇறுதியை எட்டியிருக்கிறார்.
Related Tags :
Next Story