ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்


ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
x
தினத்தந்தி 18 Nov 2021 9:11 AM GMT (Updated: 2021-11-18T14:41:02+05:30)

வங்காளதேசத்தில் நடந்து வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.டாக்கா,

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் 2021 போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், இன்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டி ஒன்றில், கொரிய நாட்டின் கிம் யுன்ஹீ, சோய் யாங்ஹீ இணை மற்றும் இந்தியாவின் ரிஷப் யாதவ்,  ஜோதி சுரேகா வென்னம் இணை விளையாடின.

இந்த போட்டியில், 155-154 என்ற புள்ளி கணக்கில் கொரிய இணை, இந்திய இணையை வீழ்த்தி வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றது.  இந்திய இணை வெள்ளி பதக்கம் வென்றது.


Next Story