கொரோனா, சார்ஸ், எபோலா ... ‘உயிர்க்கொல்லி வைரஸ்’ உருவாகுவது எப்படி?


கொரோனா, சார்ஸ், எபோலா ... ‘உயிர்க்கொல்லி வைரஸ்’ உருவாகுவது எப்படி?
x
தினத்தந்தி 6 Jun 2020 11:58 AM IST (Updated: 6 Jun 2020 11:58 AM IST)
t-max-icont-min-icon

“உயிர்க்கொல்லி வைரஸ்கள் எப்படி உருவாகின்றன” என்ற கேள்விக்கு, நுண்ணுயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆனந்தகுமார் பதிலளிக்கிறார். இவர் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், கல்வியியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றுபவர். அவரது விளக்கம் இதோ...

“வன விலங்குகளின் வாழிடங்களை நாம் அழித்ததால்தான், நமக்கு வன விலங்குகளின் மூலம், அதிக வைரஸ் நோய்கள் பரவ தொடங்கி உள்ளன என்று, அண்மையில் நடந்த இரு வெவ்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாக விளக்குகின்றன.

வவ்வால் இனங்களும், பாங்கோலின் என்ற எறும்புத்தின்னி இனங்களும் ‘புதிய சூழ்நிலை மாற்றம்’ அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர் கள் கருதுகிறார்கள். பொது வாகவே, வவ்வால் களில் எபோலா, நிபா, கொரோனா மற்றும் ஹென்டரா வைரஸ்கள் காணப்படும். வாழிடங் கள் அழிக்கப்படுதல், பருவகால மாற்றம் மற்றும் சில உடற்செயலியல் மாற்றத்தால், வவ்வால் இனங்கள் இப்போது அதீத பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இதன் தாக்கமாக வவ்வால் களின் உடலில், வைரஸ்கள் அதிகம் பெருக்கம் அடைந்து, உமிழ்நீர் மற்றும் சிறுநீர் மூலமாக மற்ற உயிரினங்களுக்கு தொற்று ஏற்பட்டு, இறுதியில் மனிதர்களுக்கிடையே வேகமாக பரவுகிறது.

டியூக் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்கள், ‘வவ்வால்கள் மூலம் வைரஸ் கிருமி பரவுதல்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து, சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.

“வாழ்விட மாற்றம், சூழ்நிலை மாற்றம் காரணமாக, வவ்வால்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, புதுப்புது வைரஸ்களை உருவாக்கி மனித உயிர்களை பலி வாங்குகிறது. ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால், இத்தகைய வைரஸ்கள் மனிதர் களையும், மற்ற பிற விலங்குகளையும் மட்டுமே கொல்லுகின்றன. இந்த வைரஸ்கள் வவ்வால்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை” என்று கூறுகிறார்கள்.

இந்த கருத்தை நிரூபிக்கும் வகையில் இரண்டு வகையான வவ்வால்களுக்கு, நான்கு விதமான கொடிய வைரஸ்களை செலுத்தி சோதனை மேற்கொண்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளனர். இந்த கருத்தை சாஸ்கேட்சிவான் கனடா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் அரிண்ஜெபெனர்ஜி, இந்தியாவின் ரோகித் சக்கரவர்த்தி மற்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

மற்றொரு வன விலங்கான, பாங்கோலின் (எறும்புத்தின்னி), ஓர் மிக அரிய வகை உயிரின மாக சர்வதேச உயிரின பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. பொதுவாக, ஆசிய பாங்கோலின்களை எட்டு வகைகளாக பிரிக்கலாம். அதில் சீனவகை பாங்கோலின்கள் மற்றும் மலேயான் வகை பாங்கோலின் களிடம் மிக அதிக அளவில் கொரோனா வைரஸ்கள் காணப் படுகின்றன. இவ்வுயிரினங் களை உணவு மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்காக சட்ட விரோதமாக கொல்கிறார்கள். அந்த வகையிலும் பாங்கோலின் களிடம் இருந்து புதுமையான உயிர்க்கொல்லி வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றி கொள் கின்றன. இதற்கு சீனாவின் உகான் மாகாண வனவிலங்கு இறைச்சி சந்தை தலைமையிடமாகிறது. ஏனெனில் அங்கு வவ்வால் மற்றும் எறும்புத்தின்னி ஆகியவை மிக பிரபலமான இறைச்சி வகைகள். அவற்றை வேட்டையாடவும், இறைச்சி சந்தையில் விற்று, உணவு சமைக்க வும் போட்டாபோட்டி நிலவுவதால், ஆண்டுதோறும் புதுப்புது உயிர்க் கொல்லி வைரஸ்கள் பிறந்த வண்ணமே உள்ளன.

அண்மையில், ‘கோவிட்19’ காரணமாக சீன அரசு, பிப்ரவரி மாதத்தில் இருந்து, வனவிலங்கு வர்த்தகத்தை தடை செய்துள்ளது. இதனை உலக அளவில் சுற்றுச்சுழல் பாதுகாப்பாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளார்கள்”. 

Next Story