பாம்பா.. பயமா.. எனக்கா..! மிகப் பெரிய நாகப்பாம்பை கையில் பிடித்துசென்ற நபர்


பாம்பா.. பயமா.. எனக்கா..! மிகப் பெரிய நாகப்பாம்பை கையில் பிடித்துசென்ற நபர்
x
தினத்தந்தி 31 Jan 2022 9:54 PM IST (Updated: 31 Jan 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

இந்த வீடியோவில், மிகப் பெரிய நாகப்பாம்பு ஒன்று திடீரென பூங்காவிற்குள் நுழைவதையும் அதனை பிடிக்க ஒரு நபர் முன்வருவதையும் பார்க்கலாம்.

சென்னை,

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பதை பொய்யாக்கி ஒரு நபர் சர்வ சாதாரணமாக பாம்பை கைகளால் லாவகமாக பிடித்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், மிகப் பெரிய நாகப்பாம்பு ஒன்று திடீரென பூங்காவிற்குள் நுழைவதையும், துளி கூட பயம் இல்லாமல், அதனை பிடிக்க ஒரு நபர் முன்வருவதையும் பார்க்கலாம்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூங்கா ஒன்றில் உள்ள பாதையில், குறுக்கே வந்த நீளமான பாம்பை பார்த்து மக்கள் விலகி நிற்கிறார்கள். 

அப்போது ஒரு நபர் அந்த்  பாம்பின் அருகே சென்று, அதனை லாவகமாக பிடிக்கிறார். அந்த நபரின் இந்த துணிச்சலைக் கண்டு அங்கு நின்றவர்கள் ஆச்சரியமடைந்தனர். 
1 More update

Next Story