150 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் புதைபடிவத்திற்கு உக்ரைன் அதிபர் பெயரை சூட்டி கவுரவித்த ஆராய்ச்சியாளர்கள்!


150 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் புதைபடிவத்திற்கு உக்ரைன் அதிபர் பெயரை சூட்டி கவுரவித்த ஆராய்ச்சியாளர்கள்!
x

இந்த விலங்கு இனம் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது தெரியவந்துள்ளது.

போலந்து ஆராய்ச்சியாளர்கள் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான பழங்கால கடல் புதைபடிவத்திற்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பெயரை சூட்டியுள்ளனர்.

இந்த விலங்கு இனம் கடந்த காலத்தில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனவை என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இந்த விசித்திரமான உயிரினத்தின் நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் முழுமையான புதைபடிவம் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவில், நட்சத்திர மீன் வகை இனத்தை சேர்ந்த ஒரு புதிய (எக்கினோடெர்ம்) முட்தோலிகள் பிரிவை சேர்ந்ததாக கருதப்படும் உயிரினத்தின் புதைபடிவத்தை கடலுக்கடியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இது ஜுராசிக் காலத்தை சேர்ந்ததாக தெரிகிறது.

இந்த உயிரினத்தின் அளவு சுமார் 5 சென்டிமீட்டர் விட்டம் கொண்டது. இந்த உயிரினம் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது மற்றும் 10 நீண்ட கால்கள் மற்றும் கூர்மையான நகங்களைக் கொண்டது.

ரஷிய படையெடுப்பில் இருந்து உக்ரைனை பாதுகாப்பதில் ஜெலென்ஸ்கியின் அசாதாரண துணிச்சல் மற்றும் தைரியத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த புதைபடிவத்திற்கு ஜெலென்ஸ்கியின் பெயர் வழங்கப்பட்டது என்று பழங்கால ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, புதைபடிவத்திற்கு 'ஒசிகிக்ரைனைட்ஸ் ஜெலென்ஸ்கி' என்று பெயர் வழங்கப்பட்டது.

இந்த விலங்கு இனம் வித்தியாசமான இறகுகள், 10 நீண்ட கைகள் மற்றும் கடலுக்கு அடியில் இறுக்கமாக பிடிக்கக்கூடிய கூர்மையான கூடாரம் போன்ற நகங்களைக் கொண்டது. இந்த புதைபடிவம் ஒரு வித்தியாசமான உயிரினத்திற்கு சொந்தமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


Next Story