விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ்


விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ்
x

மருத்துவ துறை சார்ந்த கல்வி சேவையை தொடர்ந்து 18 ஆண்டுகளாக சிறப்பாக ஆற்றி வரும் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில் நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளின் சிறப்பம்சங்கள் குறித்து டீன் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது:-

எங்களின் பல்கலைக்கழகமானது தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) மூலம் 'A' தர சான்றிதழை பெற்றுள்ளது.

பள்ளி கல்வியினை வெற்றிகரமாக முடித்து தங்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் உயர் கல்வியை தேர்ந்தெடுக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பினை வழங்கும் மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை தகுதிமிக்க பேராசிரியர்களின் உதவியோடு சிறப்பான முறையில் வழங்கி வருகிறோம்.

எங்களின் சிறந்த கல்வி சேவையினை உறுதி செய்யும் விதமாக இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் (QCI) அங்கீகரிக்கப்பட்ட தெற்கு ஆசியாவின் டியூவி - எஸ்யூடி அமைப்பானது ISO 2001: 2018 என்ற சான்றிதழை நிறுவனத்தின் கல்வி சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் ஆராய்ந்து வழங்கியுள்ளது. இந்தியாவிலேயே இத்தகைய தரச்சான்றிதழை முதலாவதாக பெற்ற ஓர் நிறுவனம் இதுவே.

மாணவர்களின் மகத்தான வளர்ச்சியினை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை செவ்வனே ஏற்படுத்தி சிறந்த வாழ்விற்கு அடித்தளமிட்டு வருகிறோம். குறிப்பாக மாணவர்கள் முதலாம் ஆண்டு பயிலும்போதே அவர்களின் துறை சார்ந்த தொழில் நுட்ப அறிவை மேம்படுத்த ஒவ்வொரு துறை பிரிவுகளின் மூலம் மேம்படுத்தப்பட்ட செயல்முறை மருந்து ஆய்வக மாதிரிகளை நிறுவி அதன் மூலம் முறையான பயிற்சிகளை அளித்து வருகிறோம்.

மேலும் தனிப்பட்ட பாடப்பிரிவுகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல் முறைகள், அவற்றின் ஆய்வக வசதிகள், அப்பாடப்பிரிவுகளை சார்ந்த ஆசிரியர்களின் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுக்கு உறுப்பினர் அந்தஸ்தினையும், அங்கீகாரத்தையும் பல்வேறு அமைப்புகள் மூலம் பெற்றுள்ளோம். குறிப்பாக கதிரியக்க துறையானது அரசின் அணுசக்தி ஒழங்குமுறை வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கண் ஒளியியல் பிரிவானது கண்ஒளியியல் கல்லூரிகளின் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும் மாணவர்களுக்கு துறை சார்ந்த சங்கங்களுடன் உறுப்பினர் சேர்க்கையையும் வழங்குகிறோம்.

மாணவர்கள் தங்களின் துறை சார்ந்த வெளிப்புற அனுபவத்தை பெறவும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தங்களின் துறை சார்ந்த வளர்ச்சிகளை அறியும் பொருட்டு சுமார் 50-க்கு மேற்பட்ட உள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குகிறோம். இதன் அடிப்படையில் அவர்களின் வேலை வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் விதமாக அவர்களுக்கு கூடுதல் பாடநெறி திட்டம் திறன் மேம்பாட்டு திட்டம், புதுமை கண்டுபிடிப்பு மையம், விளையாட்டு மற்றும் கலை வளர்ச்சி அமைப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் திறமைகளை அங்கீகரித்து வருகிறோம்.

கல்வி நிறுவனத்தின் பொறுப்பு சிறந்த கல்வியை மட்டும் வழங்குவது அல்ல. மாணவர்களை சமூக பொறுப்பாளர்களாக மாற்றுவதாகும். இதன் அடிப்படையில் துறையின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் மாணவர்கள் பல்வேறு சமூக பணியை ஆற்றியுள்ளனர். சிறப்பான சமூக பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் நோக்கத்தோடு விருதுகளுக்கு அவர்களை துறை மூலம் புரிந்துரைத்துள்ளோம்.

தொழில் துறை சார்ந்த வளர்ச்சியினை முழுமையாக மாணவர்கள் அறிய ஆண்டுதோறும் தொழில் துறை நிறுவனங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

இவ்வாறான எங்கள் துறையின் சிறந்த கல்வி சேவையையும், செயல்பாடுகளையும் அங்கீகரித்து பல்வேறு அமைப்புகள் விருதுகளை வழங்கி உள்ளது. குறிப்பாக "தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவ துறை சார்ந்த கல்லூரி", "சிறந்த வேலை வாய்ப்பிற்கான நிறுவனம்" போன்ற 10-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளோம் என்றார். மேலும் எங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் வசதி, தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வசதி, ஆண், பெண் இருபாலருக்குமான தனித்தனி விடுதி வசதிகள், சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் துறை மாணவர்களை போன்று எங்கள் துறை மாணவர்களும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதற்கான வாய்ப்பினை வழங்கி வருகிறோம் என்றார்.

குறிப்பாக எங்கள கல்லூரியில் பயின்ற மாணவர்கள் படிப்பினை முடித்து செல்லும்போது வெறும் பட்ட படிப்பிற்கான சான்றிதழை மட்டும் பெற்று செல்லாமல் கூடுதலாக அவர்களின் துறை சார்ந்த குறுகிய கால படிப்பிற்கான சான்றிதழ், வேலை வாய்ப்பிற்கான பாடநெறி சார்ந்த சான்றிதழ், தொழில் துறை சார்ந்த குறுகிய கால சான்றிதழ் ஆகியவற்றோடு பெரும்பாலான மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணையோடு வேலை வாய்ப்பினை வழங்கும் தொழில் முனைவோருக்கான பயிற்சியினை துறையின் புதுமை கண்டுபிடிப்பு மையத்தின் மூலம் வழங்கி அதற்கான சான்றிதழ்களையும் பெற்று செல்கின்றனர்.

இதனை தவிர துறையின் ஓர் சிறந்த உள்கட்டமைப்பான மின் நூலகம் மூலம் மாணவர்கள் தங்களின் துறை சார்ந்த வளர்ச்சியினை மட்டும் மேம்படுத்திக் கொள்வதோடு, பிற அரசு துறை சார்ந்த விருப்பமான வேலை வாய்ப்பினை பெற வழி வகுத்துள்ளோம். இம்மின் நூலகமானது வெறும் புத்தகங்களை மட்டும் உள்ளடக்காமல், மாணவர்கள் இணைய வழி மூலம் பல்வேறு கல்வி மற்றும் அறிவு சார்ந்த தகவல்களை பெற பல்வேறு அமைப்புகளின் இணைவும் பெற்றுள்ளது.

இவ்வாறான எங்களின் செயல்பாடுகள் பெரிதும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வித்தாக அமையும் என்பதில் ஐயமில்லை என்றார்.

1 More update

Next Story