எறும்புத் தின்னி பாதுகாவலர்கள்


எறும்புத் தின்னி பாதுகாவலர்கள்
x

ஜிம்பாப்வேவின் ஹராரேவைச் சேர்ந்த டிக்கி ஹைவுட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உலகிலேயே அதிகம் கடத்தப்படும் விலங்கான எறும்புத் தின்னியைக் காப்பாற்ற போராடி வருகிறார்கள்.

செதில்களை தன் பாதுகாப்புக் கவசமாகக் கொண்டுள்ள எறும்புத் தின்னிக்கு பின்னாளில் அதுவே எமன் ஆனது பரிதாபம்தான். எறும்புத்தின்னி அதன் செதில்கள் மற்றும் இறைச்சிக்காக அதிகம் வேட்டையாடப்படும் விலங்கு. மருத்துவத்திலும் எறும்புத் தின்னிக்கு மவுசு அதிகம் என்பதால் ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 8 எறும்புத் தின்னி இனங்களில் இன்று பெருமளவை காணவில்லை.

"எறும்புத்தின்னிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க உணவு தந்து பாதுகாத்து வருகிறோம்" என்கிறார் டிக்கி ஹைவுட் அமைப்பின் தன்னார்வலர் ஒருவர்.

அறக்கட்டளை நிதி திரட்ட தன்னார்வலர்களின் பணியை புகைப்படக்காரர் அட்ரியன் ஸ்டைரின் பதிவு செய்து வருகிறார். "அழிவு என்பது முதலில் எறும்புதின்னிகளுக்கு என்றால் அடுத்து பூமிக்கு என்பதை மக்கள் மறக்கக் கூடாது" என எச்சரிக்கிறார் அட்ரியன்.


Next Story