துபாய் கோல்டன் விசா..!


துபாய் கோல்டன் விசா..!
x

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபலங்களுக்கு வழங்கப்படும் `கோல்டன் விசா' பற்றி தெரிந்து கொள்வோம்.

அறிமுகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து, 'கோல்டன் விசா' நடைமுறையில் இருக்கிறது.

சிறப்பு

வெளிநாட்டவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கவும், வணிக முயற்சிகளை முன்னெடுக்கவும், வேலை செய்யவும் மற்றும் படிக்கவும் வழிவகுக்கிறது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், திறமைசாலிகள், சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

எங்கு, எப்படி விண்ணப்பிப்பது?

'தி பெடரல் அதாரட்டி ஆப் ஐடென்டிட்டி அண்ட் சிட்டிசன்ஷிப்' (ஐ.சி.ஏ.) இங்குதான், அமீரகத்திற்கான கோல்டன் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கலாமா?

ஆம்...! அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று, 95 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள், கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பெறும் கோல்டன் விசா மூலமாக, அவர்களது பெற்றோர்களுக்கும் சலுகைகள் கிடைத்துவிடும்.

உரிமம் புதுப்பிக்கப்படுமா?

5 அல்லது 10 வருடங்கள் என்ற கால அடிப்படையில்தான் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப நீட்டித்துக் கொள்ளலாம்.

சினிமா நட்சத்திரங்களுக்கு ஏன்?

சினிமா நட்சத்திரங்கள், 'சிறப்பு திறமைசாலிகள்' பட்டியலில் வருவதால், அவர்களுக்கு கோல்டன் விசா மிக சுலபமாக கிடைத்துவிடும். இளைஞர் மற்றும் கலாசார அமைச்சகத்தின் கீழ் சினிமா நட்சத்திரங்களுக்கான கோல்டன் விசா வழங்கப்படுகிறது.


Next Story