வெனஸ்டே


வெனஸ்டே
x

அமெரிக்க ‘கார்ட்டூனிஸ்டு’ சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட காமெடி, திரில்லர் வகை தொடர் ‘வெனஸ்டே’.

8 பகுதிகளுடன் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஹாலிவுட்டில் திரில்லர் கதைகளை இயக்குவதில் தேர்ந்த டிம் பர்டன் இயக்கியுள்ளார்.

பிறப்பிலே ஆடம்ஸ் குடும்பத்தினர் மாயாஜல சக்தி படைத்தவர்களாக இருக்கிறார்கள். கனவில் வரும் காட்சிகள் நிஜத்தில் நடக்கும் சக்தி வெனஸ்டேவுக்கு இருக்கிறது. தன் தம்பியை கேலி செய்த சீனியர் மாணவரை ராகிங் செய்த காரணத்தினால் பள்ளியை விட்டு வெளியற்றப்படுகிறாள்.

இதனால் தன் பெற்றோர் படித்த 'நெவர்மோர்' பள்ளிக்கு ஹாஸ்டலில் தங்கி படிக்க செல்கிறாள். ரத்தகாட்டேரிகள், ஓநாய்கள் என ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அந்த பள்ளியில் உள்ள அனைவருமே ஒருவித சக்தி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

வெனஸ்டே வந்த பிறகு அந்த பள்ளி அமைந்திருக்கும் கிராமத்தில் பலர் மர்மமான முறையில் சாகிறார்கள். இந்த பழி ஆடம்ஸ் குடும்பத்தின் மேல் சுமத்தப்படுகிறது. மேலும் புதிதாக வந்த வெனஸ்டேவை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளுக்கு எதிராக சதித்திட்டமும் அரங்கேறுகிறது. இவ்வாறு இடியாப்ப சிக்கலில் சிக்கும் அவள் எவ்வாறு அதில் இருந்து மீண்டு தன் படிப்பை தொடர்கிறாள் என்பதே கதை. வெனஸ்டேவாக ஜென்னா ஓர்டிகா நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதை விட அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார் எனலாம். அதிலும் பள்ளி விழாவில் ஓர்டிகா ஆடும் பேயாட்டம்.....கண்டிப்பாக இந்த 20 வயதேயான ஓர்டிகா ஹாலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார். கேத்ரின் ஜெட்டா ஜோன்ஸ், கேம் ஆப் திரோன்ஸ் புகழ் குவென்டலின் கிறிஸ்டி ஆகியோர் நடித்துள்ளனர். 'திங்க்' என்னும் அந்த ஒற்றைக்கைக்கு செய்யப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் உச்சம். அது செய்யும் குறும்புகளுக்காகவே இந்த தொடரை ரசிக்கலாம்.


Next Story