தினமும் குங்குமப்பூ குடிநீர் குடித்தால்..


தினமும் குங்குமப்பூ குடிநீர் குடித்தால்..
x

தினமும் குங்குமப்பூ குடிநீர் பருகிவந்தால் சருமம் இயற்கையாகவே பிரகாசிக்க தொடங்கிவிடும், இனிப்பு உட்கொள்ளும் ஆர்வம் குறைந்துவிடும்.

குங்குமப்பூ முகத்திற்கு கூடுதல் பொலிவு தரக்கூடியது. ஒட்டுமொத்த சரும அமைப்பையும் மேம்படுத்தக்கூடியது. உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. தினமும் குங்குமப்பூ குடிநீர் பருகிவந்தால் சருமம் இயற்கையாகவே பிரகாசிக்க தொடங்கிவிடும். முகப்பரு, தழும்புகள் போன்ற தோல் பிரச்சினைகளையும் நீக்கிவிடும் தன்மை இதற்கு உண்டு.

மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்படும் பெண்கள் குங்குமப்பூ நீர் பருகுவதன் மூலம் நிவாரணம் பெறலாம். மாதவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்பு குங்குமப்பூ நீர் பருகுவது, சீராக மாதவிடாய் சுழற்சி நடைபெற வழிவகுக்கும். தசைப்பிடிப்பு வலியையும் குறைக்க உதவும். மாதவிடாய் அதிகமாக இருக்கும் சமயத்தில் குங்குமப்பூ நீரை பருகக் கூடாது. அது உடல் சூட்டை அதிகரிக்க செய்து சிரமத்திற்கு ஆளாக்கிவிடும்.

டீ, காபி அதிகம் பருகும் பழக்கத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பவர்கள் குங்குமப்பூ நீரை மாற்று பானமாக பருகலாம். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்கு குங்குமப்பூ குடிநீர் உதவி புரியும். இலகுவாக உணர வைக்கும்.

சாப்பிட்டு முடித்தவுடன் இனிப்பு சாப்பிடுவதற்கு சிலர் ஆசைப்படுவார்கள். அப்படி சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும். காலை வேளையில் குங்குமப்பூ நீரை பருகி வந்தால் சாப்பிட்டதும் இனிப்பு உட்கொள்ளும் ஆர்வம் குறைந்துவிடும். பசி உணர்வையும் கட்டுப்படுத்திவிடும்.

குங்குமப்பூ குடிநீர் தயாரிப்பது எப்படி?

ஒரு கப் வெந்நீரில் 5 முதல் 7 குங்குமப்பூ இழைகளை போட்டு ஊற வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்த பிறகு பருகலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

உலகின் விலை உயர்ந்த மலாசாப்பொருட்களில் ஒன்றாக குங்குமப்பூ விளங்குகிறது. இது சமையலில் இடம்பெறக்கூடிய மசாலா வகையாக இருந்தாலும் விலை அதிகம் என்பதால் பலரும் உபயோகிப்பதில்லை. குங்குமப்பூவை அழகு சார்ந்த பொருளாகவே பார்க்கிறார்கள். இதனை நீரில் கலந்து பருகுவதன் மூலம் சரும பொலிவு மட்டுமின்றி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.

முடி உதிர்வு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் குங்குமப்பூ குடிநீர் பருகலாம். சில நாட்களிலேயே மாற்றத்தை உணரலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் முடி உதிர்வை தடுக்கும். மயிர்க்கால்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.


Next Story