'மாஸ்' காட்டும் தம்பி..!


மாஸ் காட்டும் தம்பி..!
x

சதுரங்க விளையாட்டில் குதிரையும் முக்கிய பங்காற்றும் என்பதால், குதிரை உருவில் செஸ் ஒலிம்பியாட் ‘மஸ்காட்’ பொம்மையை வடிவமைத்து, அதை உலகளவில் பிரபலப்படுத்தி இருக்கிறார்கள்.

2018-ம் ஆண்டு, ஜார்ஜியாவில் நடைபெற்ற 43-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு, பதுசா டர்டில்ஸ்டீன் என்ற மஸ்காட் பொம்மை உருவாக்கப்பட்டது. அது அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை பெருமைப்படுத்துவதாக அமைந்திருந்தது.

இவர்தான் தம்பி. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்குவதற்கு முன்பாகவே, நம்ம தம்பி சென்னை முழுக்க தென்பட ஆரம்பித்துவிட்டார். இப்போது பலவிதமான ஸ்டைலில், புதுமையான தோற்றங்களில், அவரது முழு குடும்பத்துடனும் காட்சி தருகிறார். யார் இந்த தம்பி, இவருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது உங்களுக்கு தெரியுமா..?

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள், கலாசார விழாக்களை பிரபலப்படுத்த, அதை தனித்துவமாக காட்ட... 'மஸ்காட்' எனப்படும் பிரத்யேக லோகோ பொம்மைகள் உருவாக்கப்படும். ஒலிம்பிக், பிஃபா கால்பந்து போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் இதுபோன்ற 'மஸ்காட்' பொம்மைகளை காணலாம்.

சமீபத்தில் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் கூட, 'காளை' வடிவ மஸ்காட் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில்தான், சர்வதேச அளவில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு என உருவாக்கப்பட்ட 'மஸ்காட்' பொம்மைதான் நம்ம 'தம்பி பொம்மை'.

சதுரங்க விளையாட்டில் குதிரையும் முக்கிய பங்காற்றும் என்பதால், குதிரை உருவில் செஸ் ஒலிம்பியாட் 'மஸ்காட்' பொம்மையை வடிவமைத்து, அதை உலகளவில் பிரபலப்படுத்தி இருக்கிறார்கள். செஸ் ஒலிம்பியாட் நம்ம தமிழ்நாட்டில் (சென்னை அருகே இருக்கும் மாமல்லபுரம்) நடைபெறுவதால், தமிழ் பாரம்பரிய உடைகளான வேட்டி-சட்டையில் 'தம்பி' வலம் வந்து நம்மை கொள்ளை கொள்கிறார்.


Next Story