கிணத்துக்கடவில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிணத்துக்கடவில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம், வேளாண்மைத்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், நல்லட்டி பாளையம் அரசு ஆரம்ப, வடசித்தூர், சொக்கனூர் அரசுமருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத காலப்பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story