படவல் கால்வாய்- சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில்தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும்;பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு


படவல் கால்வாய்- சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில்தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும்;பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு
x

படவல் கால்வாய்-சிங்கம்பேட்டை பகுதி காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும் என பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் மனு அளித்து உள்ளனர்.

ஈரோடு

பவானி

படவல் கால்வாய்-சிங்கம்பேட்டை பகுதி காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும் என பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் மனு அளித்து உள்ளனர்.

ஜமாபந்தி முகாம்

பவானி தாலுகா அலுவலகத்தில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், கேசரிமங்கலம், கல்பாவி, ஒலகடம், குறிச்சி மற்றும் காடப்பநல்லூர் ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமுக்கு பவானி தாசில்தார் தியாகராஜன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவைகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மயான வசதி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

விவசாயிகள் மனு

முகாமில் பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் இணைச்செயலாளர் ராமலிங்கம், ஈரோடு வடக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் பி.கே.பழனிசாமி ஆகியோர் அடங்கிய விவசாயிகள் குழுவினர் நேற்று தாசில்தாரிடம் புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சிலர் சங்கங்கள் ஏற்படுத்தி சட்டவிரோதமாக அரசின் அனுமதியின்றி படவல் கால்வாய் - சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில் ராட்சத குழாய்கள் அமைத்து தண்ணீர் உறிஞ்சுகின்றனர். பின்னர் அங்கிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருவரெட்டியூர், சென்னம்பட்டி, ஜரத்தல், முரளி, மறவன்குட்டை, எண்ணமங்கலம், ஒலகடம், பட்லூர், சானாத்திக்கல் மேடு, பூனாச்சி, வெள்ளித்திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு விவசாய பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்படுகிறது.

தடுக்க வேண்டும்

எனவே காவிரி ஆற்றில் பதிக்கப்பட்டு உள்ள ராட்சத குழாய்களை அகற்றி சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

அப்போது பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் பெருமாள் தங்கராசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், பொருளாளர் வினோத்குமார், மகளிர் அணி செயலாளர் சரஸ்வதி, தொழிற்சங்க துணைத் தலைவர் ஜீவானந்தம், ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் பவானி ஒன்றிய தலைவர் ரங்கநாதன் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் தவசி அம்மாள் உள்பட பலர் உடனிருந்தனர்.

முகாமில் தாசில்தார் வீரலட்சுமி, தலைமையிடத்து துணை தாசில்தார் ஹரிஹரன், மண்டல துணை தாசில்தார் மோகனா, வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகாயி, வருவாய் ஆய்வாளர்கள் மாதேஸ்வரி, விஜயலட்சுமி, மஞ்சுளா, தேர்தல் துணை தாசில்தார் சரவணன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story