ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா


ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 2:48 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீலகிரி

ஊட்டி: ஊட்டி வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வேணுகோபால சுவாமி கோவில்

ஊட்டி நகரின் மையப்பகுதியான புது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

காலை 7.35 மணிமுதல் சிறப்பு பூஜைகளுடன் நான்காம் கால யாகசாலை பூஜைகளும், ஹோமங்கள், அக்னி மண்டல மஹா கும்பாதிகள் விஜர்சனம், யாத்ரா தானம் செய்யப்பட்டு கடம் புறப்படுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து காலை 10 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பக்தி கோஷம்

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி மாரியம்மன் கோவிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை அர்ச்சகர் விநாயகம் தலைமையில் வேணுகோபால சுவாமி கோவில் அர்ச்சகர் விஸ்வநாத் ஆனந்தன் மற்றும் பட்டாச்சாரியர்கள் கலசம் மீது புனித நீர் ஊட்டி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா... வெங்கட்ரமனா... என்று பக்தி கோஷம் எழுப்பினர். இதைதொடர்ந்து மஹா தீபாராதனை நடத்தப்பட்டது.மதியம் 11.30 மணி முதல் கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 3.05 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை 5 மணிக்கு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் ராஜேஸ் மணிகண்டன், ஆய்வாளர் ஹேமலதா மற்றும் கோவில் அர்ச்சகர்கள் லட்சுமி நாராயணன், பார்த்தசாரதி, ஹரி கிருஷ்ணன், சடகோபன் ஆகியோர் செய்து இருந்தனர்.

1 More update

Next Story