36 வார்டுகளிலும் குப்பைகள் அள்ள ரூ.1½ கோடியில் வாகனங்கள்
அருப்புக்கோட்டையில் 36 வார்டுகளிலும் குப்பைகளை அள்ள ரூ.1½ கோடியில் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் 36 வார்டுகளிலும் குப்பைகளை அள்ள ரூ.1½ கோடியில் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
தூய்மை பணிகள்
அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அவுட்சோர்சிங் முறையில் தனியார் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அருப்புக்கோட்டை நகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்காக 15-வது நிதிக்குழுவின் கீழ் ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை அள்ளுவதற்காக 20 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி கூறியதாவது:- அருப்புக்கோட்டை நகரை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
20 வாகனங்கள்
அதன் ஒரு பகுதியாக அனைத்து வார்டுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிப்பதற்காக 15-வது நிதி குழுவின் கீழ் ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 20 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது துப்புரவு பணிகள் மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டு அந்த வாடகை நகராட்சிக்கு வருமானமாக கிடைக்கும். இதன் மூலம் நகரின் அனைத்து இடங்களிலும் குப்பைகள் சேராத வண்ணம் தூய்மை பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். விரைவில் இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இ்வ்வாறு அவர் கூறினார்.