பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு - அண்ணாமலை பேட்டி


பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு - அண்ணாமலை பேட்டி
x

பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பெட்ரோல் விலையை 14 ரூபாய், டீசல் விலையை 17 ரூபாய் குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை திமுக அரசு குறைப்பேன் என்று கூறி உள்ளது. தேர்தல் வாக்குறுதி படி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் இல்லை என்றால் 72 மணி நேரத்திற்குள் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும். திமுக அரசு செயல் தன்மை இல்லாத அரசு.

142 என்ற சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி பேரறிவாளன் வெளியில் வந்துள்ளார். அவர் அவருடைய வாழ்க்கையை வாழட்டும். ஆனால் அவர் கொண்டாடப்பட வேண்டியவர் கிடையாது என்பதை முதல்-அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் கட்சத்தீவு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். தவறுதலாக கொடுக்கப்பட்டது கட்சத்தீவு. Article 6 பயன்படுத்தி அங்கு மீன் பிடிக்க வைப்பதுதான் ஒரே வழி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story