விழுப்புரம் செஞ்சிக் கோட்டைக்கு செல்ல 10 நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி
செஞ்சிக் கோட்டைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 10 நாட்கள் இலவச அனுமதி வழங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 'செஞ்சிக் கோட்டை' வரலாற்று புகழ்பெற்றது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கோன் வம்ச அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோட்டை, தற்போது விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
செஞ்சிக் கோட்டை மலை மீது பிரசித்தி பெற்ற ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரத உற்சவ திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை மறுநாள் முதல் மே 3-ந்தேதி வரை 10 நாட்கள் செஞ்சிக் கோட்டைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story