10 கிலோ கடல் அட்டை பறிமுதல்


10 கிலோ கடல் அட்டை பறிமுதல்
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் 10 கிலோ கடல் அட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வனச்சரகர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பகுதியில் ரோந்து சென்றபோது ஒரு இடத்தில் கடல்அட்டை அவிப்பது தெரிந்தது.

உடனடியாக அதிகாரிகள் அங்கு சென்றபோது கடல்அட்டையை அவித்து கொண்டிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து அங்கிருந்த 10 கிலோ கடல் அட்டை மற்றும் அடுப்பு, கியாஸ் சிலிண்டர் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து வந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது மேற்கண்ட நபர் தேவிபட்டினம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த அஜ்மல்கான் (வயது40) என்பது தெரியவந்துள்ளது. அவரை தேடி வரும் வனத்துறையினர் கைப்பற்றிய கடல்அட்டையை கோர்ட்டில் ஒப்படைத்து அழித்தனர்.


Related Tags :
Next Story