10 கி.மீ தூரம் நடைபயிற்சி...மயங்கி விழுந்து பலியான பயிற்சி காவலர்...!


10 கி.மீ தூரம் நடைபயிற்சி...மயங்கி விழுந்து பலியான பயிற்சி காவலர்...!
x

10 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு வாக் பயிற்சியை முடித்துவிட்டு பயிற்சி பள்ளிக்கு திரும்பிய காவலர், திடீரென மயங்கி விழுந்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நடைப்பயிற்சிக்கு பின்னர் மயங்கி விழுந்த பயிற்சி காவலர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரியின் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர், கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில் கடந்த 29 ஆம் தேதி, 10 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு வாக் பயிற்சியை முடித்துவிட்டு பயிற்சி பள்ளிக்கு திரும்பிய அவர், திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய், சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story